ETV Bharat / state

'ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும்' - உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சுபஸ்ரீயின் தந்தை! - Subasree's father filed a petition in the HC

சென்னை: பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Oct 9, 2019, 8:22 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்ததில், அவர் சாலையில் தடுமாறி விழுந்தார். இதில், பின்னால் சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயராமனை 12 நாட்களுக்குப் பின்னர் கைது செய்தது. இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்புக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான், தனது மகள் இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிக்கலாமே: பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நேரமிது

Intro:Body:பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பள்ளிக்கரனையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்து சாலையில் தடுமாறி விழுந்தார்.

இதில், பின்னால் சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயராமனை 12 நாட்க்ளுக்கு பின்னர் கைது செய்தது.

இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்பு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.