ETV Bharat / state

திமுக பேரணியில் பர்ஸை இழந்த சுப. வீரபாண்டியன்! - திமுக பேரணியில் திருட்டு

சென்னை: நேற்று நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் பேரணியில் கலந்துகொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியனின் பர்ஸ் காணாமல் போயுள்ளது.

suba veerapandian
suba veerapandian
author img

By

Published : Dec 24, 2019, 9:09 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியனும் கலந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் நடந்து சென்றபோது கூட்டத்தில் அவரது பர்ஸ் காணாமல் போயுள்ளது. அதில் சுமார் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காசோலை உள்ளிட்டவை இருந்துள்ளது.

பேரணியில் கலந்துகொண்ட யாரோதான் அவரின் பர்ஸை திருடியிருக்கக்கூடும் என்ற நிலையில், இதுதொடர்பாக சுப. வீரபாண்டியன் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் விளையாடிய திருடன்!

Intro:Body:சென்னை குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் வகையில் சென்னை எழும்பூரில் இன்று காலை திமுக சார்பில் பேரணி நடைப்பெற்றது.

இதில் கூட்டணி கட்சிகள் உட்பட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த பேரணியில் கலந்து கொண்ட சுப.வீரபாண்டியன் நடந்து சென்ற போது கூட்டத்தில் அவரது பர்ஸ் காணாமல் போயுள்ளது.மேலும் இந்த பர்ஸில் 5ஆயிரம் ரூபாய்,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை இருந்துள்ளது.

மேலும் கூட்டத்தில் பர்சை திருடி இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக சுப.வீரபாண்டியன் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.