முதுபெரும் அரசியல் தலைவரான திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு சுப. வீரபாண்டியன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1949ஆம் ஆண்டில் மேடையேறிய கடைசி அத்தியாயம் இன்று மறைந்தது. கட்சிக் கொள்கை மாறாமல் இறுதிவரை மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு துணையாக இருந்தவர்.
பள்ளிக் காலத்தில் அவர் ஊட்டிய தமிழ் உணர்வு காரணமாக எனக்குத் தமிழ் உணர்வு ஏற்பட்டது. பிறரிடம் எவ்வாறு அன்பு காட்டுவது என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை