தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் வரை நடத்த திட்டமிடப்பட்டுயிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக மார்ச் 24 வரை மட்டும் கூட்டத்தொடர் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வரும் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு நிதித் துறையை கவனித்துவரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்ட பிறகு, அரசுக்கு ஏற்படும் எதிர்பாராத செலவுகள், அவசர செலவுகளை ஈடுகட்ட துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்வது வழக்கம்.
அதன்படி கரோனா பாதிப்பால் அரசுக்கு ஏற்பட்டுள்ள சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட, இந்தத் துணை மதிப்பீடுகள் கைக்கொடுக்கும் என்று நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: சசிகலாவுக்கே அதிமுக பொதுச் செயலாளர் பதவி - நம்பிக்கை தெரிவிக்கும் ராஜா செந்தூர்பாண்டியன்