ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து 4 மண்டலங்களில் ஆய்வுக் கூட்டம்! - Anbil mahesh

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து 4 மண்டலங்களாக பிரித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து 4 மண்டலங்களில் ஆய்வு கூட்டம்!

author img

By

Published : Jun 24, 2022, 11:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் வகையில் வருகிற ஜூலை 5 முதல் 27 வரை, 4 மண்டலங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவும், அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைந்துள்ளதா என்பதையும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மேற்பார்வை செய்வார்கள்.

அப்போது பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வதுடன், தேவையான கட்டமைப்பு வசதிகளையும் கண்டறிந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் மண்டல அளவிலான கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். இதனடிப்படையில் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் கடந்த ஆண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து 4 மண்டலங்களில் ஆய்வு கூட்டம்!
பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து 4 மண்டலங்களில் ஆய்வு கூட்டம்!

இதனைத்தொடர்ந்து நடப்புக்கல்வியாண்டில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்த்து திருவாரூர் மண்டலத்தில் ஜூலை 5 மற்றும் 6 ஆகிய நாட்களிலும், திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஜூலை 12,13 ஆகிய நாட்களிலும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

மேலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து ஜூலை 19, 20 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்த்து ஆய்வுக் கூடடம் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 35 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்கும் குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.