ETV Bharat / state

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை படித்துதான் ஆக வேண்டும் - அமைச்சர் மா.சு. விளக்கம் - நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரையில் நீட் தேர்விற்கு படித்துத்தான் ஆக வேண்டும் எனவும், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளித்தாலும் தற்போது உள்ள நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 22, 2022, 6:04 PM IST

Updated : Sep 22, 2022, 7:39 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் லயன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்ட உபகரணங்களைத்தொடங்கி வைத்தும், கண் தானம் செய்த குடும்பத்தினரை கெளரவித்தும், பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'லயன்ஸ் கிளப் மூலம் நடத்தப்படும் கண் வங்கிக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லயன்ஸ் கிளப் சார்பில் கண்கள் தானாமாக பெறப்பட்டுள்ளன. உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 3 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,41,073 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 7 ஆயிரம் கண்கள் தானமாக பெறுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், 3,203 கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. 1,526 கருவிழிகள் கண் கருமாற்று அறுவை சிகிச்சைக்கு பெறப்பட்டு இருக்கின்றன.

பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 2 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. தேசிய பார்வை இழப்பினைத் தடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா சட்டத்துறையின் மூலம் மே மாதம் 5ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா மீது ஜூலை 25ஆம் தேதி ஆளுநரின் முதன்மைச்செயலாளர், தமிழ்நாடு சித்த மருத்துவப்பல்கலைக்கழக சட்ட மசோதாவில் உள்ள மாணவர்கள் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ தேசிய ஆணைய சட்டம் 2020இல் உள்ள சட்டப்பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்க கடிதம் அனுப்பி இருந்தார்.

இது குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்து பெறப்பட்டு, ஆளுநரின் முதன்மைச்செயலாளருக்கு சட்டத்துறை செப்டம்பர் 17ஆம் தேதி விரிவான பதில் அனுப்பி உள்ளது. அதில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவின் பிரிவுகளுக்கும், இந்திய மருத்துவ தேசிய ஆணையச்சட்டம் 2020 மற்றும் ஹோமியோபதி தேசிய ஆணைய சட்டப்பிரிவுகளுக்கும் முரண்பாடு இல்லை என விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

நிச்சயம் இந்த கருத்துகளை ஏற்று ஆளுநர் விரைவில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதியை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

சித்த மருத்துவத்திற்கு ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கை என வரும்போது இன்றைக்கு என்ன நிலையோ அது தான் தொடரும். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து எடுத்துக்கொண்டு இருக்கிறார். அதற்கான கோப்புகள் குடியரசுத்தலைவர், உள்துறை அமைச்சகத்திடம் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார்.

'நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வுக்கு படித்துத்தான் ஆக வேண்டும்'

மருத்துவத்துறையின் சார்பில் நானும், செயலாரும் டெல்லிக்குச்செல்லும் போது தொடர்ந்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில் இன்று இருப்பது போல்(நீட் தேர்வு) தான் நாளை சித்த மருத்துவப்பல்கலைக் கழகம் வந்தால் உடனடியாக இருக்கும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு வந்துவிட்டால் , அன்று உள்ளது போல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என தெளிவான விளக்கங்களுடன் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரையில் நீட் தேர்விற்குப் படித்துத்தான் ஆக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அறிவித்ததை அடுத்து 1400 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சிசிக்கை அளிக்கப்பட்டது.

மேலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் 326 பேர் தனியார் மருத்துவமனையிலும் 109 பேர் வீடுகளிலும் என மொத்தமாக 444 பேர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்;மக்கள் மத்தியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

Last Updated : Sep 22, 2022, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.