ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்புக்கான கட்டணம் உயர்வு.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு! - increase in fees for research studies

சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி கட்டணத்தை 100 ரூபாயிலிருந்து 25ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Etv Bharat முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சி கட்டண உயர்வுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

author img

By

Published : Aug 11, 2023, 7:02 PM IST

ஆராய்ச்சி படிப்புக்கான கட்டண உயர்வுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், மிகக்குறைந்த கல்விக் கட்டணத்தில் தங்களது ஆய்வுப் பட்டத்தை நிறைவுசெய்து வருகின்றனர். இங்கு முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகச் சூழலிலிருந்து வரக்கூடியவர்கள். இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவால் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்வதற்கான கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆராய்ச்சி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் துணை வேந்தரைச் சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளனர். ஆராய்ச்சி பட்டபடிப்பினை மேற்கொள்ளும் மாணவர் விக்னேஷ்வரன் கூறும்போது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டதாகச் செய்தி வெளியாகியது. அது தொடர்பாக விளக்கம் கேட்டு மாணவர்கள் இங்குக் கூடியிருக்கிறோம். மேலும், பல்கலைக் கழகம் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மனு அளிக்கவுள்ளோம்.

உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்து துணை வேந்தரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்த விதமான கட்டணமும் உயர்த்தப்படவில்லை என கூறியிருக்கிறார். இதனால், முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாங்கள் மனு அளித்த விளக்கம் கேட்க இருக்கிறோம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஏற்கனவே விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் இருந்தது.

அதனை 300 ரூபாய் எனவும், முழு நேர ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 25ஆயிரம் ரூபாயாகவும், பகுதி நேர ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 5 ஆயிரம் இருந்ததை 35ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முனைவர் பட்ட விண்ணப்பம், ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுத் தரவு அறிக்கை உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் முனைவர் பட்டம் மேற்கொள்வது பொருளாதார வசதியற்ற பலருக்கும் எட்டாக் கனியாகிவிடும்.

ஏற்கனவே இருக்கும் கல்விச் சுமைக்கு இடையே பொருளாதார சுமையை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த கட்டண உயர்வு அமையம். எனவே, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகக் குழு, முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்கான பல்வேறு கட்டணங்களையும் உயர்த்தியிருப்பதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள் ஆய்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் மேலும் முழு நேர மாணவர்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாத நிலையில் ஆய்வு செய்வதிலும் பின்னடைவு ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான உறுப்பு வன்முறை கொடுமையானது - மணிப்பூர் கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.