சென்னை ஆவடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மாணவிகளில் நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் நான்கு மாணவிகள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் ரயில் மூலம் சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு