ETV Bharat / state

கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் கொள்ளும் மாணவர்கள்! - இன்ஜினியரிங் பாடப்பிரிவு

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நடந்த நிலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பாடப்பிரிவினை 4ஆயிரத்து 712 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 2, 2023, 7:08 PM IST

Updated : Aug 3, 2023, 11:51 AM IST

சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கு முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் தற்காலிகமாக 16ஆயிரத்து 516 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பாடப்பிரிவினை 4ஆயிரத்து 712 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்தாண்டும் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2லட்சத்து 19ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் ஒரு லட்சத்து 60ஆயிரத்து 783 கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது.

அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 12ஆயிரத்து 59 இடங்களும், தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 685 இடங்கள் நிறைவடைந்தன.

பொது மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட பொது கலந்தாய்வின் முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 2) வெளியிடப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் 16ஆயிரத்து 516 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 10ஆயிரத்து 716 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்தாண்டைப் போலவே நடப்பாண்டிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பாடப்பிரிவினை 4ஆயிரத்து 712 மாணவர்கள், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவினை 2ஆயிரத்து 848 மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம் ஆயிரத்து 883 மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆயிரத்து 799 மாணவர்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆயிரத்து 206 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

மேலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 808 மாணவர்கள், தகவல் தொழில்நுட்பம் 435 மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் 361 மாணவர்கள், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்பு 351 மாணவர்கள், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் 271 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் 151, கெமிக்கல் இன்ஜினியரிங் 152, பயோ டெக்னாலாஜி 143, தமிழ் வழியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் பாடப்பிரிவினை ஒரு மாணவரும் தேர்வு செய்துள்ளனர். 93 பாடப்பிரிவுகள் உள்ள நிலையில் கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவுகளை மட்டுமே மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை காண உள்ள அரசு பள்ளி மாணவர்கள்-பள்ளி கல்வித் துறை நடவடிக்கை!

Last Updated : Aug 3, 2023, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.