ETV Bharat / state

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 2,99,558 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மே 22-ஆம் தேதி மாலை வரை 2,99,558 மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 2,99,558 பேர் விண்ணப்பம்!
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 2,99,558 பேர் விண்ணப்பம்!
author img

By

Published : May 23, 2023, 7:28 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள, இளநிலை பட்டப்படிப்பு உயர் கல்வித் துறைக்கான (2023-2024) விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில், மே 8-ஆம் தேதி காலை முதல் துவங்கியது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, மே 22-ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என்றும் மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு 22-ஆம் தேதி மாலை வரை 2,99,558 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இதில், மாணவர்கள் 1,15,752 பேரும், மாணவிகள் 1,28,274 பேரும் மற்றும் திருநங்கைகள் 78 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மேலும், அவர்களில் 2,44,104 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இதில், அரசு பள்ளியில் படித்த மாணவிகள் சுமார் 54,638 விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர்ந்தால், மாதம் தரும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டியல் மற்றும் விபரங்கள், இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக, முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், அந்த கல்லூரிகள் குறித்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்வதற்காக தகவல் மையத்தின் தொடர்பு எண்கள் எழுதி வைக்கப்பட்டன.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மே 22-ஆம் தேதி இரவு 12 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கு, தமிழ் மொழி பட்டப்படிப்பு மற்றும் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு 25-ஆம் தேதி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு வருகின்ற மே 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் இதனைத் தொடர்ந்து ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ஆம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘ஜூன் 1 ஆம் தேதி கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.