ETV Bharat / state

+2 தமிழ் தேர்வு எப்படி? - மாணவர்கள் கருத்து

author img

By

Published : Mar 2, 2020, 6:56 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்நிலையில் மொழிப்பாடமான தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்வித்தாள் எளிதாக இருந்ததாக கூறியுள்ளனர்.

+2   தமிழ்  தேர்வு  எப்படி?  - மாணவர்கள் கருத்து
+2 தமிழ் தேர்வு எப்படி? - மாணவர்கள் கருத்து

தமிழ்நாடு, புதுச்சேரியில் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏழாயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.பொதுத்தேர்வுக்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விருப்ப மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ் வழியில் பயின்ற நான்கு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ் மொழி பாடத்தில் தேர்வு எழுதினர். காலை 10 .15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1. 15 மணிக்கு முடிவுற்றது. தேர்வினை முடித்துவிட்டு வெளியில் வந்த மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

+2 தமிழ் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து

தேர்வு குறித்து மாணவிகள் கூறும்போது, "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புளுபிரிண்ட் இல்லாமல் தேர்வு எழுதும்பொழுது அச்சமாக இருந்தது. பாடப்புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டியிருந்தது. தேர்வுக்கு செல்வதற்கு முன்னர் பயம் இருந்தது. ஆனால் தேர்வறையில் வினாத்தாளை வாங்கிப் பார்த்த பின்னர் கேள்விகள் எளிதாக இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தோம். தமிழ் பாடத் தேர்வில் எழுத்துப்பிழைகள் எதுவும் இல்லாமல் எளிமையாக இருந்தது" என்றனர்.

இதையும் படிங்க;

அவைத்தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.