ETV Bharat / state

நடுரோட்டில் மதுபோதையில் காவலர்களை தாக்கிய மாணவர்கள்! - மதுபோதையில் போலீசாரை தாக்கிய மாணவர்கள்

நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் காவல்துறை வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருவரும் மோதிக் கொள்ளும் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

நடுரோட்டில் மதுபோதையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

author img

By

Published : Nov 26, 2021, 9:54 PM IST

சென்னை: கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் 1ஆவது தெரு சந்திப்பில் நேற்று (நவ.25) நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ரோந்து வாகனத்தில் சென்ற காவலர்களான முருகன் மற்றும் சரத்குமார் ஆகியோர் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களைக் கலைந்து செல்லும் படி எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

மதுபோதையில் போலீசாரை தாக்கிய மாணவர்கள்

இதனால், இளைஞர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறையினர் வாகனத்தின் மீது கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் அந்த நபரை லத்தியால் தாக்கியதால், பதிலுக்கு மாணவர்கள் கட்டையைக் கொண்டும் கல்வீசியும் காவலர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.

போலீசாரை தாக்கிய மாணவர்கள்
போலீசாரை தாக்கிய மாணவர்கள்

இதனையடுத்து, காவலர்கள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக ரோந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவலர்களைத் தாக்கிய 3 நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரை தாக்கிய மாணவர்கள்
போலீசாரை தாக்கிய மாணவர்கள்

விசாரணையில் எம்.கே.பி நகரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் மகன் மார்டின்(24) என்பவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் கலை செல்வன்(27), ஜான் ஆல்வின்(23) ஆகியோர் சாலையில் கொண்டாடியது தெரியவந்தது.

இதனையடுத்து மதுபோதையில் காவலர்களைத் தாக்கியதாகக் கூறி மூவரையும் கொடுங்கையூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது ஒருவரையொருவர் மாறி மாறி கட்டையால் தாக்கும் காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.