ETV Bharat / state

பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு - ambathur

சென்னை ஆவடியில் பேருந்து படிக்கட்டில் இருந்து கால் தவறி கீழே விழுந்து ஐடிஐ படிக்கும் மாணவன் உயிரிழந்தான்

ஆவடியில் பேருந்து படிக்கட்டில் இருந்து கால் தவறி கீழே விழுந்து மாணவன் உயிரிழப்பு.

author img

By

Published : Jun 21, 2022, 7:55 PM IST

சென்னை: ஆவடி அடுத்த கன்னடபாளையம், ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் தமிழ்மாறன் (18). இவன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐயில் முதலாண்டு படித்து வருகிறான். இந்நிலையில் இன்று தமிழ்மாறன் வகுப்பு முடிந்தவுடன் ஆவடி பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து வீட்டுக்குச்செல்ல தடம் எண்.61 கே என்ற மாநகரப் பேருந்தில் ஏறியுள்ளான்.

அப்போது, அவன் படிக்கட்டில் இருந்து கால் தவறி கீழே விழுந்து உள்ளான். இதில், அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடினான். இதனையடுத்து, அவனை அக்கம்பக்கத்தினர் ஆட்டோ மூலம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தமிழ்மாறன் இறந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து ஆவடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பருக்குள் முடியும்' - சென்னை மேயர் பிரியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.