சென்னை தண்டையார்பேட்டை அகஸ்தியா குடியிருப்புப் பகுதியில் வசித்துவருபவர் சரத் சந்த். இவரது மகன் ஆதித்யா மகரிஷி (16). இந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. அதில் ஆதித்யா மகரிஷி குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஆதித்யா இன்று மதியம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாக ஆதித்யாவின் அறை திறக்காததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து பார்க்கும்போது ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.