சென்னை சேப்பாக்கத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவகள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறியதாவது, "ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை அரசு உடனடியாக குறைத்திட வேண்டும் எனக் கோரிக்கைவைத்து 54 நாள்களுக்கு மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தப் போராட்டங்களுக்குத் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துப் போராடிவருகின்றனர்.
இதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு சுகாதாரத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை நாங்கள் மனமார வரவேற்கிறோம்.
ஈரோடு அரசு மருத்துவமனை பற்றி அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரின் கல்விக் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் போராட்டம் தொடரும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி