ETV Bharat / state

பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை: தமிழ்நாடு தேர்வுத்துறை எச்சரிக்கை - பொதுத்தேர்வுகளில் முறைகேட்டு தண்டனை

சென்னை: பொதுத்தேர்வின் போது மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

தண்டனை விவரங்கள்
தண்டனை விவரங்கள்
author img

By

Published : Mar 1, 2020, 1:27 PM IST

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12, 11, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மார்ச் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. அதற்குத் தேவையான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையமுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, அவர்களின் நுழைவுச்சீட்டிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முறைகேடுகளில் ஈடுபட்டால் அதற்கான தண்டணை விவரங்கள் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அதேபோல், தேர்வுப்பணி ஆசிரியர்களுக்கும் தேர்வு வழிமுறைக் கையேடு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கையேட்டில் ஆண்டுத் தோறும் மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுப்பட்டால் அளிக்கப்படும் தண்டனை விபரங்கள் இடம்பெறும்.
12, 11, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு அளிக்கப்படும் 16 வகையான தண்டனைகள் குறித்து தேர்வுத்துறை பட்டியலை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வறையில் மாணவர்கள் அன்றைய தேர்விற்கான புத்தகம், குறிப்புகள் போன்றவற்றை வைத்திருந்து அதனை அறைக்காணிப்பாளரிடம் அளித்தால், அவர்களிடம் விளக்கம் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

தேர்வின் போது துண்டுச்சீட்டுகள், புத்தகங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

அடுத்த மாணவரை பார்த்து எழுதினாலோ, வெளியிலிருந்து யாராவது உதவி செய்தாலோ, அந்த மாணவரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி வாங்க வேண்டும்.

அதன்பிறகு அவர்கள் அந்தத்தேர்வை எழுதமுடியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாது.

tamilnadu-goverment
தண்டனை விவரங்கள்

தேர்வறையில் துண்டு சீட்டுகளை மறைத்து வைத்து பார்த்து எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவார்கள்.

தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் தேர்வு எழுத முடியாமல் தடை செய்யப்படுவார்கள்.

tamilnadu-goverment
தண்டனை விவரங்கள்
tamilnadu-goverment
தண்டனை விவரங்கள்

ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வு எழுதுவதிலிருந்து நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள்.

விடைத்தாள் மாற்றம் செய்தால் தேர்வு எழுதுவதிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்யப்படுவார்கள்.

விடைத்தாளில் தேவையற்ற எழுத்துகளையோ, குறியீடுகளையோ எழுதினால் அந்தத்தேர்வு விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது.
விடைத்தாள் மாற்றுவது, கேள்வித்தாளை எடுத்து செல்வது, கேள்வித்தாளை வெளியில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மூன்றாண்டுகளுக்கு தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள். விடைத்தாளில் ரகசிய குறியீடுகள் எழுதுவது, சந்தேக எழுத்துகளில் எழுதுதல், பதிவு எண்களை மாற்றுவது, விடைத்தாள் திருத்த முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள்.

அருகிலுள்ள மாணவர்களுக்கு விடைகளை எழுதிக்கொடுத்தால், அவர்கள் குறிப்பிட்ட தேர்விலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். கேள்வித்தாளில் விடையை எழுதி வேறுத்தேர்வருக்கு அளித்தால் அந்தத்தேர்வு ரத்துச் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: பொதுதேர்வு எழுதுபவர்களில் விவரத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.