சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சோலையம்மாள். இவரது வீட்டில் குடிநீர் தேவைக்காக சுமார் 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அங்கு இரண்டு தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டுள்ளன. அப்போது, அதில் ஒரு நாய் கிணற்றில் தவறி விழுந்தன.
பின்னர் தவறி விழுந்த நாய் பலத்த சத்தமிடவே அருகிலிருந்த செந்தில் என்பவர் கோயம்பேடு தீயணைப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து சென்றனர்.
அவர்கள் கயிற்றின் மூலம் 50அடி ஆழ கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் இறங்கி, சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி நாயை உயிருடன் மீட்டனர்.இதைத் தொடர்ந்து, மீட்ட நாய்க்குத் தீயணைப்பு வீரர்கள் முதலுதவி அளித்தனர். தெரு நாய்க்காக உயிரைப் பணய வைத்த போராடிய தீயணைப்புத் துறை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் கார் லாரி மோதி பயங்கர விபத்து: 4 பேர் உயிரிழப்பு!