சென்னை: கோட்டூர்புரம் அவ்வை காலனி மண்ணப்பா தெருவைச் சேர்ந்தவர், வேதவல்லி(52). இவர் கடந்த 20 வருடங்களாக கோட்டூர்புரம் துலுக்கானத்தம்மன் கோயில் 1வது தெருவில் ஃபேன்சி ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வேதவல்லி வழக்கம் போல் ஃபேன்சி ஸ்டோரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர், இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த நிலையில் மற்றொருவர் ஃபேன்சி ஸ்டோர் உள்ளே சென்று 100 ரூபாய் கொடுத்து பவுடர் டப்பா ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார்.
வேதவல்லி கடையில் இருந்த பவுடர் டப்பா ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, சில்லறை 70 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது மர்ம நபர் வேதவல்லி கழுத்தில் அணிந்திருந்த ''மூன்று சவரன் தங்கச் சங்கலியை கொடுங்கள்... நான் மந்திரித்து கொடுக்கிறேன். உங்கள் கடைக்கு நல்ல வசூல் ஆகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய வேதவல்லி சிறிதும் கூட யோசிக்காமல் மர்ம நபர் கொடுத்த 100 ரூபாயும் தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியினையும் கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் மர்ம நபர் அந்த தங்கச் சங்கிலியை 100 ரூபாய் நோட்டுக்குள் வைத்து மடித்து பத்து முறை 'பங்களா, பங்களா' என்று கூறி அந்த நோட்டை கல்லாப் பெட்டியில் வைத்து மந்திரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடி, எம்பி பொன் கௌதம சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!
இதையடுத்து மீண்டும் வேறு ஒரு பவுடர் டப்பா வேண்டுமென மர்ம நபர் வேதவல்லியிடம் கூறியுள்ளார். இதனால் வேறு ஒரு பவுடர் டப்பாவை எடுப்பதற்கு சென்ற போது மர்ம நபர் கல்லாப் பெட்டியில் இருந்த மூன்றரை சவரன் தங்கச்சங்கிலியுடன் வைத்த நூறு ரூபாய் நோட்டை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வேதவல்லி கடைக்கு வெளியே வந்து பார்த்தபோது, வெளியே நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் அந்த மர்ம நபர் ஏரி தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வேதவல்லி இந்தச் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர். அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப் படைகள் அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட்கா ஊழல் வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு அனுமதி கிடைக்கவில்லை என 11வது முறையாக கூறிய சிபிஐ!