ETV Bharat / state

நீட் தேர்வுக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது - பிரின்ஸ் கஜேந்திரபாபு - நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது

நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு
author img

By

Published : Jan 30, 2022, 2:47 PM IST

Updated : Jan 30, 2022, 3:54 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய, 'தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான சட்டம் 2021' சட்ட முன்வடிவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டம் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று(ஜன.30) நடைபெற்று வருகிறது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, "தமிழ்நாட்டின் ஆளுநர் சட்டத்தின் ஆட்சியை மதிக்காமல் அவர் விரும்பும் வகையில் குடியரசு தின செய்தியை வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதைத்தான் தமிழ்நாடு ஆளுநர் செய்கிறார். இது இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக சவால் விடுவதைப் போன்றது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்

சட்டமேதை அம்பேத்கர் எவையெல்லாம் செய்யக் கூடாது என்று தெரிவித்தாரோ அதைத்தான் மோடி அரசு, தமிழ்நாடு ஆளுநர் செய்து வருகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விவாதம் மேற்கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவை கொண்டு வந்தார். ஆனால் ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் பரிசீலித்து வருவதாக கூறி காலம் தாழ்த்தி வருகிறார்.

மக்களாட்சியைக் காப்பாற்ற கல்வியாளர்கள் களத்தில் இறங்கிப் போராடி வருகிறோம். சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவையுங்கள் என்ற போராட்டம் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் நடத்தப்படக்கூடிய போராட்டம்.

நீட் தேர்வுக்கு எதிரான குரல் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு, இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மற்றும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பறிக்கக்கூடிய ஒன்று. நீட் தேர்வுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்"என்று தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்றார்.

இதையும் படிங்க: காந்தி நினைவு நாள்: மரியாதை செலுத்திய தலைவர்கள்

Last Updated : Jan 30, 2022, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.