சென்னை: இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அவசர காலங்களில் விமானங்களில் உள்ள பயணிகளை மீட்பதற்கானவும் தீயை அணைக்கவும் படிக்கட்டுகளுடன் அதிநவீன கருவிகள் கொண்ட தீயணைப்பு வாகனம் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ளது.
அதேபோல் தற்போது சென்னை விமான நிலையத்திற்கு படிக்கட்டுகளுடன் கூடிய அதி நவீன தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. உயரமான இடங்களுக்கும், கட்டடம் இல்லாமல் விமானங்களில் ஏற்படும் தீ ஆபத்து காலங்களில் தீயை அணைத்து, பயணிகளை பாதுகாப்பாக இந்த வாகனத்திற்கு மாற்றி, படிக்கட்டுகள் மூலம் கீழே இறக்குவதற்கும் வசதிகள் உள்ளன.
![அதிநவீன தீயணைப்பு மீட்பு வாகனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-stateoftheartfirefightingvehicle-photo-script-7208368_21072022073921_2107f_1658369361_203.jpg)
இந்த வாகனத்தில் தண்ணீர் டேங்க், தீயணைப்பதற்கான நுரை சேமிப்பு டேங்க் போன்றவைகளும் உள்ளன. போயிங் 747, ஏர்பஸ் 350 போன்ற பெரிய ரக விமானங்களிலும் திடீரென தீ போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் இந்த வாகனம் மூலம் உடனடியாக தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியும்.
![அதிநவீன தீயணைப்பு மீட்பு வாகனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-stateoftheartfirefightingvehicle-photo-script-7208368_21072022073921_2107f_1658369361_351.jpg)
இந்த வாகனம் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் உள்ள தீயனைப்புத் துறை மூலம் பயன்பாட்டிற்காக விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் டோல்கேட்டில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி