ETV Bharat / state

மாநிலம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத்!

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண, தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் தேசிய லோக் அதாலத் இன்று நடத்தப்படுகிறது.

State lok adalut conduct today
State lok adalut conduct today
author img

By

Published : Dec 12, 2020, 12:48 PM IST

சென்னை: நாடு முழுவதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் ஆதாலத் நடத்தபடும். இன்று மக்கள் நீதிமன்றங்களை நடத்த தேசிய லோக் ஆதாலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் லோக் ஆதாலத் நடைபெறுகின்றது.

இன்றைய லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பான காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர்கள் தகராறு வழக்குகள், மின்சாரம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 115 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இதேபோல, நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை மோசடி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 79 ஆயிரத்து 962 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இந்த வழக்குகளில் தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை தவிர தமிழ்நாடு முழுதும் கீழமை நீதிமன்றங்களில் 354 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியான கே.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைகளில் இன்று மக்கள் நீதிமன்றம் நடத்தபடவில்லை.

இதையும் படிங்க: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.110 கோடி வழங்க லோக் அதாலத் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.