ETV Bharat / state

முதலமைச்சர் தலைமையில் பட்டியலினத்தவர் உரிமைகளுக்கான கண்காணிப்புக்குழு - State Level High Level Awareness and Monitoring Committee

முதலமைச்சர் தலைமையில் பட்டியலினத்தவர் உரிமைகளுக்கான கண்காணிப்புக்குழு

author img

By

Published : Jul 23, 2021, 5:55 PM IST

Updated : Jul 23, 2021, 7:43 PM IST

17:49 July 23

சென்னை:  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ், மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுவானது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்டு, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில், 'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 விதி மற்றும் திருத்த விதிகள் 2018இன் படி மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். 

முதலமைச்சர் தலைமையில் குழு

அதன்படி முதலமைச்சர் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அளவிலான உயர் நிலைக்குழுவின் தலைவராக முதலமைச்சர், உறுப்பினர்களாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் என்.சந்திரசேகரன், ப.செல்வராசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் கே.ஜெயக்குமார், ஜி.செல்வம், ரவிக்குமார், ராஜா, தொல்.திருமாவளவன், எம்.செல்வராஜ், தனுஷ் எம்.குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த அம்பேத் குமார், அமலு, அமுல் கந்தசாமி, மு.பெ.கிரி, சக்ரபாணி, ப.தனபால், தமிழரசி, பரந்தாமன், மரகதம் குமரவேல், ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட 42 சட்டப்பேரவை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக தலைமைச்செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் அல்லது துணை இயக்குநர், தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர் அல்லது துணை இயக்குநர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழுவின் பணிகள்
மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு ஆண்டிற்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கூட்டப்படும். 

அதில், 'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச்சட்டம் 2015 ஆகியவற்றின் செயலாக்கத்தை ஆய்வு செய்தல்;

இன்னலுற்றோர் மற்றும் சாட்சிகளுக்கு நீதி கிடைப்பதற்கான உரிமையை நிலை நாட்டல்;

வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவைப்பற்றிய விவரங்கள், இந்தச்சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்து, மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்' என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரி வருவாய் இலக்கை அடைய முனைப்புடன் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Last Updated : Jul 23, 2021, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.