இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எதிர்வரும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொள்கிறார். இதனைத் தொடர்ந்து மாநிலக் குழு கூட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நள்ளிரவில் வெளியான தொகுதி பங்கீட்டு உடன்படிக்கை - பின்னணி என்ன?