ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு கலைப்பு - மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு கலைப்பு

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழுவை தமிழ்நாடு அரசு கலைத்துள்ளது.

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக்குழு

author img

By

Published : Mar 1, 2022, 8:41 PM IST

சென்னை: குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநிலக்குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டது.

இதன்மூலம், கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை, குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே மேற்கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது, அதிமுக ஆட்சிக்காலத்தில் தலைவர் உள்பட 6 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வெளியிட தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கி, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.