சென்னை: மயிலாப்பூர் ரோட்டரி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர், பிரபு. இவர் அக்கவுன்டன்ட் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகள் காலமாக வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் பிரபு தனது தாய் குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை பிரபுவின் தாய் சுமதி துணியை காய வைப்பதற்காக மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் சிறுமியை கடத்த முயற்சி செய்துள்ளார். இதனைக்கண்ட பிரபு, அந்த நபரை பார்த்து கூச்சலிட்டதால், அவர் ஓட முயற்சி செய்து கீழே விழுந்துள்ளார்.
அதன் பின்னர், அந்த நபரை பிடித்து தாக்கி விசாரிக்கும்போது அதிகளவிலான போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரபு, ராயப்பேட்டை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.
மேலும், அந்த போதை ஆசாமியிடம் நடத்திய விசாரணையில் வந்தவாசி பகுதியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் புருஷோத்தமன் என்பதும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் அதிகளவிலான போதையில், 'ஸ்டாலின் தான் என் அப்பா; அவர் வருவார்' என உளறிக் கொண்டிருந்தார். இதனையடுத்து போதையில் இருந்ததால் அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:கொடநாடு வழக்கின் விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!