ETV Bharat / state

‘எழுந்து வா தலைவா..!’ - கருணாநிதி நினைவிடத்தில் முழங்கிய எம்.பி.க்கள்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வெற்றிபெற்றுள்ள திமுக எம்.பிக்களுடன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஸ்டாலின்
author img

By

Published : May 25, 2019, 2:30 PM IST

Updated : May 25, 2019, 2:43 PM IST

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுக கூட்டணி வாரி சுருட்டியுள்ளது.

அண்ணா, கலைஞர் நினைவிடம் நோக்கி
அண்ணா, கலைஞர் நினைவிடம் நோக்கி

கருணாநிதியின் வழிகாட்டுதல் இல்லாமல் ஸ்டாலின் பொறுப்பேற்று நடத்திய முதல் தேர்தலில், இந்த வெற்றி அவரின் தலைமை பண்புக்கும், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் செயலுக்கும் கிடைத்த பெரும் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

எம்.பி படையுடன் வீரநடை
எம்.பி படையுடன் வீரநடை

இந்த நிலையில், புதிதாக வெற்றி பெற்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

அண்ணா நினைவிடத்தில் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் மரியாதை
அண்ணா நினைவிடத்தில்...
ஓய்வெடுக்கும் கருணாநிதியிடம் வெற்றியை சமர்ப்பித்த ஸ்டாலின்

அதேபோல், பெரியார் திடல் சென்ற ஸ்டாலின், அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தந்தை பெரியார் நினைவு சிலையை திக தலைவர் கி.வீரமணி ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார்.

வாழ்த்தும் கி.வீரமணி
வாழ்த்தும் கி.வீரமணி
பெரியார் நினைவிடத்தில் மரியாதை
பெரியார் நினைவிடத்தில் மரியாதை
பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்

தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அவரிடமும் வாழ்த்துகளைப் பெற்றார்.

பெரியார் சிலையை பரிசலித்த வீரமணி
பெரியார் சிலையை பரிசளித்த வீரமணி
தலைவருக்கு தொண்டன் மரியாதை
தலைவருக்கு தொண்டன் மரியாதை

இதற்கிடையே, கருணாநிதி மறைந்த பிறகு நடைபெற்றுள்ள முதல் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பதை பார்க்க, ‘எழுந்து வா தலைவா...!’ என அக்கட்சியின் தொண்டர்கள் கருணாநிதி நினைவிடத்தில் முழக்கமிட்டது அக்கட்சியின் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Intro:Body:Conclusion:
Last Updated : May 25, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.