ETV Bharat / state

'2020-21ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும்' - ஸ்டாலின்

சென்னை : 2020-21ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்
author img

By

Published : May 27, 2020, 7:09 PM IST

சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அதிமுக ஆட்சியில், ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டதால், புதிய வரவு செலவுத் திட்டத்தை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 14.02.2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ’2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை’ மற்றும் அதன் ’மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்’ எல்லாம் கரோனா பேரிடரால் உருவிழந்துள்ளன.

கரோனாவால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது என்பதை அதிமுக அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது, வேடிக்கையாகவும் இருக்கிறது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே 4 கோடியே 56 லட்சம் ரூபாய் கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிதிநிலை, அறிக்கையில் மாநில அரசின் சொந்து வரி வருவாய் 1 கோடியே 33 லட்சம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது ஆளுங்கட்சிக்கு ஆறுதல் செய்தியாக இருந்தது. ஆனால் அந்த ஆறுதலுக்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாயாக மதிப்பிடப்பட்ட 2 கோடியே 19 லட்சத்தில், மேற்கண்ட 1 கோடியே 33 லட்சம் ரூபாய் சொந்த வருவாய் மூலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக மட்டுமல்ல, ஏற்கனவே சீரழிந்து விட்ட அதிமுக அரசின் நிதி மேலாண்மையால், கானல் நீராகவே மாறி காணாமல் போய் இருப்பது தான் தற்போதைய நிலவரம்.

இந்நிலையில், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, மாநில அரசின் நிதி நிலைமை என்று திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கும் அதிமுக ஆட்சியில், ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020-21ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை, முற்றாகத் தோல்வி கண்டுவிட்டதால், நிச்சயம் மறுபரிசீலனை செய்திட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டும், பல தரப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பினை கவனத்தில் வைத்தும், 2020-21ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நேருவின் 56ஆவது நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.