ETV Bharat / state

'குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்' முதலமைச்சர் - சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்

author img

By

Published : Dec 4, 2022, 1:15 PM IST

சென்னை: மருந்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) நடத்தி வைத்தார். தொடர்ந்து, இணைகளுக்கு சீர்வரிசை பொருட்களை முதலமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து முதலமைச்சர் மேடையில் பேசியதாவது, இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது.

முதலமைச்சரை வேலை வாங்கும் அமைச்சர்:

இந்த துறையின் அமைச்சர் சேகர்பாபுவை பற்றி நான் பலமுறை பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில், பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு “செயல் பாபு” என்று ஏற்கனவே நான் பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். அவரும் அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.

நான் உங்களிடையே வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். கோபித்துக்கொள்ளக் கூடாது. ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். ஏதோ வேலை வாங்குகிறார் என்றால் தேவையில்லாத வேலையில்லை என கூறினார்.

நாட்டுக்கு பயன்படக்கூடிய வேலை, மக்களுக்கு பயன்படக்கூடிய வேலை. ஆக அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குரிய துறையை பொறுப்பேற்றுக்கொண்டு அவர் பல்வேறு பணிகளை, பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை, இதுவரையில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் இந்து சமய அறநிலையத் துறைக்கு இப்படிப்பட்ட சாதனை எங்கேயாவது நடந்திருக்கிறதா? என்று கேட்டால், தைரியாமாக, தெம்பாக சொல்லலாம், இல்லை என்று. தமிழ்நாட்டில் மட்டும் தான் நம்முடைய சேகர்பாபு வைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துறைதான் அது ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று கம்பீரமாக நம்மால் சொல்லமுடியும் என தெரிவித்தார்.

அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம். பல கோயில்களிலும் இதை விரிவுபடுத்த திட்மிட்டிருக்கிறோம். பெண் ஒருவரை நியமித்திருக்கிறோம். கோயில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு. எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தையும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார்.

மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்:

இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது. நம்மை பொறுத்தவரைக்கும் அண்ணா வழியில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக்கூடியவர்கள் நாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அந்த நிலையில் நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

217 இணையர்களுக்கு திருமணம்:

ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அறநிலையத் துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு, கட்டுப்பாட்டோடு, எழுச்சியோடு இங்கே நடந்திருக்கிறது. இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

நீங்கள் மறந்துவிடக் கூடாது மன்னராட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மக்களாட்சிக் காலமாக இருந்தாலும் சரி, அது கோயில்கள் என்பது மக்களுக்காகத்தான். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் கோயில்கள் என்பது மக்களுக்காககத்தான். கோயில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சிக் காலத்தில் இந்தத் துறை உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசு இன்றைக்கு தன்னுடைய சாதனையை செய்து கொண்டிருக்கிறது. கோயில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, இது ஏதோ எங்களுக்கு புதுசல்ல, இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள். ஆகவே, மக்களுடைய எதிர்பார்ப்பை ஏற்ற வகையில், அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டார்.

குடும்பக் கட்டுப்பாடு செய்யுங்கள்:

இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லாம் நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும், மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ நிறுத்திக்கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம். அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரச்சாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்றார்.

அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், ஆக, சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற இந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு, புரட்சிக்கவிஞன் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய், வாழ்க, வாழ்க, வாழ்க என முதலமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம்: கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.