ETV Bharat / state

'ஒரே வாரத்தில் 4 மரணம்; நாட்டை போலீஸ்ட்ட கொடுத்துட்டு என்ன செய்றீங்க முதலமைச்சரே' - ஸ்டாலின் காட்டம்

சென்னை: தென்காசியில் காவலர்கள் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டைக் காவல் துறையினரிடம் கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

stalin cm palaniswami
stalin cm palaniswami
author img

By

Published : Jun 28, 2020, 10:21 PM IST

Updated : Jun 28, 2020, 10:49 PM IST

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சிறையிலேயே அடுத்தடுத்து மரணமடைந்தனர். இவர்கள் இருவரும் காவல் துறையினர் தாக்கியதால்தான் உயிரிழந்துவிட்டனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சூழலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்னை தேசிய அளவில் கவனம் பெற்றதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி இன்று கூறியுள்ளார்.

இதனிடையே நேற்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர், காவல் துறையினர் தாக்கியதால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று கடிதம் எழுதிவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மூவர் இறந்த ஈரம் காய்வதற்குள் தென்காசியில் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இவரின் இறப்புக்கும் காவல் துறையினரே காரணம் எனக்கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மே 10ஆம் தேதி விசாரணைக்காக குமரேசனை அழைத்துச்சென்ற காவல் துறையினர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இச்சூழலில் கடந்த ஜூன் 12ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் குமரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர்களிடம் தனக்குக் காவல் நிலையத்தில் நேர்ந்தவை குறித்துக் கூறியுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைக் கண்டித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், “தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல் துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் இது நான்காவது மரணம். நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்துகொண்டு இருக்கிறார்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் ட்வீட்
ஸ்டாலின் ட்வீட்

தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் குமரேசனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தபட்ட வீரகேரளம்புதூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், காவலர் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே குமரேசனின் உடல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'ஆறப்போட்டால் அமைதியாகிவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்' - உதயநிதி

Last Updated : Jun 28, 2020, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.