ETV Bharat / state

பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட ஸ்டாலின், சோனியா! - ஸ்டாலினிடம் கரோனா பாதிப்பு குறித்த கேட்டறிந்தார்

சென்னை: கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக நிலையைப் பற்றி திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டறிந்தார். அப்போது இரு தலைவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.

stalin -sonia gandhi
stalin -sonia gandhi
author img

By

Published : Apr 4, 2020, 12:49 PM IST

Updated : Apr 4, 2020, 1:35 PM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று காலை திமுக தலைவர் மு. க ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நாடு முழுவதும் கரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திமுக தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் தமிழ்நாட்டின் நிலைமையை கேட்டறிந்தார்.

அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின், சோனியா காந்தியின் உடல் நலத்தையும் அவர் குடும்பத்தினர் அனைவரின் நலத்தையும் விசாரித்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட அவர்கள் இருவரும், இந்த சூழ்நிலையிலிருந்து இந்திய மக்கள் விரைவில் மீள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உணவின்றி வாடும் கடற்கரையோரப் பறவைக் கூட்டம்

Last Updated : Apr 4, 2020, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.