சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னை, கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கௌதமபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
பின் அவர்,”தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இன்று திறந்து வைத்திருக்கிறேன். 111 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய கட்டடத்தை திறந்து வைத்திருக்கிறேன்.
840 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு இன்று குடியிருப்புதாரர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த கட்டடத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன். முதன் முதலில் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, எரியாத ஆஸ்பெஸ்டாஸ் அமைப்பில் முதன்முதலில் அந்த வீடு கட்டக்கூடிய திட்டத்தை அண்ணா தொடங்கினார்கள்.
அப்படி அந்தத் திட்டம் தொடங்கி ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டாலும், முழு அளவுக்கு அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆக, அதுவும் மழை பெய்கின்றபோது சில கஷ்டங்கள் ஏற்படுகிறது என்ற ஒரு நிலை இருந்தது. அதனால் தான், அண்ணா மறைவிற்குப் பிறகு, ஆட்சிப் பொறுப்பேற்று 1970ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் என்ற ஒரு அமைப்பை இந்தியாவிலேயே முதன் முதலில் ஏற்படுத்தியது கருணாநிதி தான்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த காரணத்தால் நாங்கள் பயனடைகிறோம் என்று நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். உங்களை மகிழ்ச்சி அடைய வைக்க திராவிட முன்னேற்றக் கழக அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றைய தினம் 840 குடும்பங்கள், அந்த குடும்பங்களின் வாழ்வில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதுவும், கொளத்தூர் தொகுதியில் மிக முக்கியமான பகுதி, இந்த கெளதமபுரம்.
இங்கு வரும்போதெல்லாம் இந்த கௌதமபுரம் பகுதியிலுள்ள மக்கள் எந்தளவுக்கு எனக்கு வரவேற்பு தந்திருக்கிறார்கள், தந்து கொண்டிருக்கிறார்கள், தந்து கொண்டே இருப்பார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட நிலையிலேதான், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தபோது, இந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி மிகப் பழுதடைந்து இருந்த அந்தக் கோலத்தை கடந்த 9.8.2015 அன்று இங்கு வந்து நான் பார்த்தேன்.
அதற்குப் பிறகு மீண்டும் 27.7.2016 வாரியம் என்று பெயரைச் சூட்டினோம். குடிசையை மாற்றிக் கட்டடம் கட்டுவது மட்டும் நோக்கம் அல்ல. இந்த நகர்ப்புற மக்களது வாழ்க்கையும் மேம்பட வேண்டும், வாழ்விடமும் மேம்பட வேண்டும், வாழ்க்கைத் தரமும் மேம்பட வேண்டும் என்று நினைக்கும் அரசுதான் திமுக அரசு. அதனால்தான், இதை திராவிட மாடல் அரசு என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: யாருக்காக ஷிண்டே வருகிறார்? யாரை மிரட்டுகிறார்கள்? - பாஜக அண்ணாமலைக்கு எதிராக சீறிப்பாய்ந்த கேசிஆர்!