தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனின் தாயாரும், மறைந்த மூப்பனாரின் மனைவியுமான கஸ்தூரி மூப்பனார் இன்று காலை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80.
இதையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கஸ்தூரி மூப்பனாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், ஜி.கே. வாசன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.
அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஜி.கே. வாசன் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.