சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் பதிவில், “மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவை பேணி வந்துள்ளோம். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பாகும். பெரும் புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கிய போதும் எளிமையான மனிதராகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.
தலைவர் கலைஞரின் மறைவுக்கு தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது, இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.
புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னட திரையுலகம் தன் மிகச்சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் அவரது குடும்பத்தினர், கர்நாடக மக்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!