ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்: எடப்பாடி பழனிசாமி - ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Aug 10, 2022, 4:09 PM IST

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். நேற்று காலை தர்மபுரியில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களின் வழியாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு பூந்தமல்லியில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ரமணா, அப்துல் ரஹீம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து வீரவாள் வழங்கி வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், "மின் கட்டணம், வீட்டு வரி உயர்வை வாக்களித்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசாக கொடுத்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை எப்படி நடைமுறை படுத்துவது, தடை செய்வது என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்கின்ற ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

எடப்பாடி பழனிசாமி

ஆன்லைன் சூதாட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. அதில் சில பகுதிகள் திமுகவிற்கு கிடைக்கிறது. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கிறாராம், முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் குழு அமைப்பார் 14 மாத திமுக ஆட்சியில் 37 குழு அமைத்துள்ளார்.

அந்தக் குழுக்கள் எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை, அதிமுகவை எவராலும் உடைக்க முடியாது. திமுக துணையோடு அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து பொருட்களை எல்லாம் சேதப்படுத்தினார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்தவர் தற்போது மண்ணில் உயிரோடு இல்லை. அதிமுகவிற்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள் அதற்குண்டான பலனை அனுபவித்து விடுவார்கள் என பேசினார்.

எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிவாக்கம் சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் ஏராளமான தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க வரவேற்றனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு 1 கோடி பரிசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.