தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றுரை அதிமுக அரசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. இதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் வேலூரில் உபகரணங்கள் வழங்கி உள்ளோம். சென்னை, காஞ்சிபுரம், பொன்னேரி ஆகிய இடங்களில் 2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி தலைவருக்கு அரசை குறை கூறுவதைத் தவிர வேறுஎந்த வேலையும் இல்லை. அவர் கூறிக்கொண்டேதான் இருப்பார். நாங்கள் எந்த அளவுக்கு செயல்படுகிறோம் என்று மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நன்றாகத் தெரியும்" என்றார்.
மேலும் கோவையில் அ.தி.மு.க. கொடிகம்பம் விழுந்து பாதிக்கப்பட்ட அனுராதாவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதற்கு மூத்த அமைச்சர்கள் பதில் கூறுவார்கள் என்று பதில் கூற மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக கம்பத்தால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி