ETV Bharat / state

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் ஆலோசனை - விழிப்புணர்வு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

போதை பொருள் தடுப்பு நடவடிக்கை
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை
author img

By

Published : Oct 10, 2022, 6:21 PM IST

Updated : Oct 11, 2022, 7:11 AM IST

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் காவல் துறையும் எடுத்து வருகிறது. போதைப் பொருள்களின் புழக்கத்தை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பள்ளி, கல்லூரிகளின் அருகில் போதை பொருள் விற்பதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், எந்த விதத்திலும் போதை பொருள் தமிழ்நாட்டில் ஊடுருவ கூடாது என்றும் இதற்காக மாநில, மாவட்ட எல்லைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் சோதனை சாவடிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ . இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க . பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில் குமார், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தூர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பிளாட்பார்மில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது

Last Updated : Oct 11, 2022, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.