சென்னை: சென்னையில் கடந்த 3 நாள்களாகத்தொடர்ந்து பெய்த கனமழையினால் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. அந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால்,
சென்னையில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் (நவ.01) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் மழை இல்லாததால் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கின. ஆனால், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீர் தேங்கி இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழைநீரை ராட்சத மோட்டார்கள் வைத்து அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி கூறும்போது, “சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கின்றது. இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் ஏற்பட்ட மின்கசிவும் முழுவதும் சீர் செய்யப்பட்டது. உரிய நேரத்தில் மின்கசிவு ஏற்ப்பட்டது கண்டறியப்பட்டுவிட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.
இதையும் படிங்க: மழைநீரால் காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்