தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாமர மக்களின் பாதிப்பைப் பற்றி கவலைப்படாமல் 100 நாட்களில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு செயல்படுகிறது. டிக்கெட் கட்டணம் 53% உடனே உயரும். ரயில் நிலையங்கள் தனியார் கம்பெனிகள் வசமும், சரக்குப் போக்குவரத்தை தனியார்மயப்படுத்தி விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. அகில இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் 14 லட்சம் ரயில் தொழிலாளர்களும், 100 கோடி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
18.06.19 அன்று டெல்லியில் நடைபெற்ற ரயில்வே அலுவலர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் இந்த முடிவை 100 நாட்களில் செயல்படுத்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த முடிவை திறும்பப் பெறக்கோரி எஸ்.ஆர்.எம்.யூ உள்ளிட்ட அமைப்புகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.