ETV Bharat / state

மூடநம்பிக்கைகளால் புறக்கணிப்பை சந்தித்த கணித முன்னோடி - ராமானுஜன் நினைவு தினம்!

author img

By

Published : Apr 26, 2020, 4:59 PM IST

கணித மேதை ராமானுஜர் மறைந்து 100 ஆண்டுகள் ஆனபோதும் அவரது பெரும் கணித சூத்திரங்களை நிரூபிக்க உலகமே இன்னும் முயன்று கொண்டிருக்கிறது.

Srinivasa Ramanujan
Srinivasa Ramanujan

இன்றைய 90's கிட்ஸுகளின் வாழ்க்கை, தொழில்நுட்பங்களோடு பின்னிப்பிணைந்துள்ளது. விரல் நுணியில் உலகச் செய்திகளைப் பெற ஸ்மார்போன்கள், தேவைப்படும்போது ஐந்து நிமிடங்களில் பணத்தைப் பெற ஏடிஎம்கள் என்ற ஒரு வாழ்க்கைதான் பெரும்பாலான 90's கிட்ஸ்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த அனைத்துத் தொழில்நுட்பங்களுக்குப் பின்னுள்ள கணிதம் குறித்தும், அந்த கணிதத்தில் உலக அறிஞர்களையே வியப்பிற்குள்ளாக்கிய கணித மேதை ராமானுஜர் குறித்தும் சிந்திக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

கணிதம் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜி என்றிருக்கும் நிலையில், அந்தக் கணிதத்தில் பெரும் புலியாகத் திகழ்ந்த ராமானுஜர் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி ஈரோட்டில் சீனிவாச ஐயங்கார், கோமளத்தம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

தாயின் சொந்த ஊரான ஈரோட்டில் பிறந்த இந்தக் குழந்தை, தந்தையின் ஊரான கும்பகோணத்திற்குத் திரும்பியபோது தனது முதல் போராட்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் உலகத்தையே அச்சுறுத்திவந்த பெரியம்மை நோய், வரும் காலத்தில் மகத்தான கண்டுபிடிப்புகள் செய்யவிருக்கும் இந்த குழந்தையையும் பாதித்தது.

சிறு குழந்தையாக இருக்கும்போதே மன வலிமையுடன் அந்நோயை எதிர்த்து போராடி வென்றார். அப்போதிருந்து இவரது மனத்திற்கும் மூளைக்கும் இருந்த வலிமை இவரது உடலுக்கு இல்லாமல் போய்விட்டது.

உலகைப் புரட்டிப்போட்ட கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட பெரும்பாலோனோர் முறையான கல்வியைப் பெறாதவர்கள். ஏனென்றால் முறையாகக் கல்வியைப் பெறுபவர்கள் வெறும் நான்கு கட்டத்திற்குள்ளேயே சிந்திப்பார்கள். மேதைகளால் மட்டுமே அந்த நான்கு கட்டத்திற்கு வெளியே சிந்திக்க முடியும்.

அப்படி ஒரு மேதைதான் இந்தக் கணித மேதை. கணிதத்தைத் தவிர வேறெந்த பாடங்களிலும் ராமானுஜரால் கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாகப் பல முறை முயன்றும் கடைசி வரை இந்தியாவில் இவரால் கல்லூரி படிப்பை முடிக்க முடியவில்லை.

இருப்பினும் கணிதத்தின் மேலான இவரது காதல் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இவர் உருவாக்கிய சூத்திரங்களை இங்கிலாந்திலுள்ள கணிதவியலாளர்களுக்கு அனுப்பிவைத்தார். ஆனால் இந்தியர், அதிலும் கல்லூரிப் படிப்பை முடிக்காத அவரது கடிதங்கள் பெரும்பாலும் திறக்கப்படாமலே குப்பைத் தொட்டிகளை நோக்கிச் சென்றன.

அப்போது இங்கிலாந்திலிருந்த புகழ்பெற்ற கணிதயிலாளர்களில் ஒருவர் ஜி. எச். ஹாட்டி. அவரது கண்டுபிடிப்புகளை மறுத்து அவருக்கே கடிதம் எழுதியிருந்தார் நம் கணித மேதை. பொதுவாக அறிவாளிகளுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை யாராவது சவால் செய்தால் மிகவும் பிடிக்கும்.

Srinivasa Ramanujan
இங்கிலாந்து செல்வதற்கு முன் ராமானுஜர்

அதனால்தான் ராமானுஜரின் கடிதங்கள் குப்பைத் தொட்டிக்குச் செல்லாமல் ஹாட்டியின் மேசைகளுக்கு நேரடியாகச் சென்றது. ராமானுஜரின் கணித ஆற்றலை அந்த ஒரே கடிதத்தில் உணர்ந்துகொண்ட ஹாட்டி, ராமானுஜரை இங்கிலாந்துக்கு வர அழைப்பு விடுத்தார்.

ஆனால் அக்காலத்தில் பிராமண வகுப்பில் பிறந்தவர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. இதன்காரணமாக இங்கிலாந்து செல்ல மறுத்தார் ராமானுஜர். அன்று கடல் கடந்து செல்ல மறுத்த இந்த ராமானுஜரின் சூத்திரங்களை அடிப்படையாக வைத்துதான், தற்போது ஐரோப்பா முதல் அமெரிக்கா வரை அனைத்து கண்டங்களிலும் அத்தியாவசிய கருவியாக இருக்கும் ஏடிஎம் செயல்படுகிறது என்பது நகை முரண்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின் ராமானுஜரையும் அவரது தாயையும் சம்மதிக்க வைத்தார் ஹாட்டி. தான் இங்கிலாந்து வந்தால் எந்தவொரு தேர்வுமின்றி தன்னை கல்லூரியில் சேர்த்து கணிதத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட அனுமதி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் இங்கிலாந்து செல்லத் தயாரானார் ராமானுஜர்.

உறவினர்களிடம் தான் கொல்கத்தாவுக்குச் செல்வதாகப் பொய் கூறிவிட்டு இங்கிலாந்து புறப்பட்டார். இரண்டு மாத காலம் ஆன அந்த கப்பல் பயணம் ராமானுஜருக்கு மிகவும் கொடூரமாக இருந்தது. வயிற்று வலி, வாந்தி ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டார். கப்பலில் உள்ள மருத்துவரின் கவனிப்பால், உடல்நிலை தேறி ஒரு வழியாக இங்கிலாந்தில் இறங்கினார்.

அங்கு ஹாட்டி தான் வாக்களித்தபடி தேர்வுகள் ஏதுமின்றி ட்ரினிட்டி கல்லூரியில் ராமானுஜரைச் சேர்த்தார். அங்கு தொடர்ந்து கணித ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார். இந்தியாவில் அவருக்குக் கிடைக்காத கல்லூரிப் பட்டம் இங்கிலாந்திலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில் அவரது கணித ஆய்வுகளுக்காகக் கிடைத்தது. ராமானுஜருக்கு இருக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அவருக்கு எப்.ஆர்.எஸ். பட்டத்தை வாங்கி தர வேண்டும் என்று விரும்பினார் ஹாட்டி. அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கினார்.

இருப்பினும் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்குச் சிறப்பாக இருக்கவில்லை. அந்த நாட்டின் குளிரை அவரது உடல் ஏற்கவில்லை, அந்நாட்டின் உணவுப் பழக்கத்தை அவரது மனம் ஏற்கவில்லை. இரண்டு மூன்று சட்டைகள் அதற்கு மேல் கம்பளி என்று போட்டுச் சென்ற போதும் அவரை குளிர் வாட்டியது.

Srinivasa Ramanujan
இங்கிலாந்தில் ராமானுஜர்

சுத்த சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்த அவருக்கு இங்கிலாந்தில் கிடைக்கும் உணவுகளில் அசைவம் கலந்திருக்குமோ என்ற எண்ணம் அவரது மனதை வாட்டியது. போதாக்குறைக்கு இந்தியாவிலிருக்கும் அவரது மனைவியை தாய் கொடுமைப்படுத்துவதாக வந்த செய்தி பேரிடியாக அமைந்தது.

உடல் மோசமாக இருந்தாலும் மன வலிமையுடன் செயல்பட்டுவந்த ராமானுஜரின் மன வலிமையும் நாளுக்கு நாள் நொறுங்கிவந்தது. ஒரு நாள் குழப்பத்தின் உச்சத்தில் சென்ற ராமானுஜர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் கேம்பிரிட்ஜிலுள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்தார். அறிஞர்களை இந்த உலகம் அவ்வளவு சீக்கிரம் கைவிடாது. தற்கொலைக்காகப் படுத்துக் கொண்டிருந்த ராமானுஜர் நல்வாய்ப்பாகக் காப்பாற்றப்பட்டார்.

பின் தனது கணித ஆற்றலாலும், ஹாட்டியின் முயற்சியாலும் 1918ஆம் ஆண்டு மே மாதம் எப்ஆர்எஸ் பட்டம் பெற்றார். இருந்தாலும் உடல்நிலை மட்டும் அவருக்குத் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே இருந்தது. சுமார் ஐந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் உடல்நிலை முன்னேறியதாகத் தெரியவில்லை.

இதனால் இந்தியா திரும்பும் முடிவுக்கு வந்தார். பருத்த தேகத்துடன் இங்கிலாந்து சென்றவர், ஒட்டிய கன்னங்களுடன் அடையாளமே தெரியாத வகையில் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை திரும்பினார்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும், அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவரது கணித ஆய்வுகள் முன்னோக்கி சென்றுகொண்டிருந்தது.

Srinivasa Ramanujan
கணித மேதை ராமானுஜர்

எவ்வித சிகிச்சையும் பலனளிக்காததால், 1920 ஏப்ரல் 26ஆம் தேதி உயிரிழந்தார். வெறும் 32 வயதுவரை மட்டுமே அவர் வாழ்ந்தாலும், பல நூறு ஆண்டுகளுக்குத் தேவையான கணித ஆய்வுகளைத் தான் வாழ்ந்த காலங்களில் நிறைவாகச் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

உயர் சாதி என்று கூறப்படும் வகுப்பில் பிறந்திருந்தாலும், இவரும் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்தான். ஆம் சம்பிரதாயங்களை மீறி வெளிநாட்டுச் சென்றதால், யாரும் இவரது உடலுக்கு இறுதிச் சடங்கை மேற்கொள்ள முன்வரவில்லை. உலகம் போற்றும் இந்த கணித மேதையின் இறுதி ஊர்வலத்தில் வெறும் சொற்ப நபர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

100 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கணித மேதையின் உடல் சேத்துப்பட்டில் எரிந்தாலும், அவரது சூத்திரங்களை நிரூபிக்க உலக மேதைகள் போராடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.