இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரனை ஓய்வு பெற்ற நீதிபதிகள் எ.கே. ராஜன், சண்முகம், அக்பர் அலி, அரிபரந்தாமன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், "எங்களைப் பொருத்தவரை இலங்கையில் இருக்கும் 10 லட்சம் மக்கள் போரின் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் தவறான நடவடிக்கையால் உலகின் பல நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் திரும்பவும் எங்கள் நாட்டிற்கு வர வேண்டிய சூழல் தற்போது இருக்கின்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இரட்டைக் குடியுரிமை என்பதை நீங்கள் வேறுவிதமாக பார்க்கிறீர்கள். நீங்கள் அதை மனித உரிமை மீறல் என்கிற முறையில் பார்க்கின்றீர்கள். நாங்கள் அவருடைய தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற எதார்த்தமான நிலையிலிருந்து பார்க்கிறோம். எங்கள் தரப்பிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர் மட்டுமல்லாது திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு தலைவர்களோடு என்னை பேசுமாறு பலர் கேட்டிருக்கின்றனர். அதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தால் யாருடனும் பேச நாங்கள் தயார். இரட்டைக்குடியுரிமை சாத்தியமாவதற்கான சூழல் இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஃபேஸ்புக் காதல்: கனடா நாட்டுப் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்
ஈழத்தமிழர்கள் முகாம்களில் இருக்க வைத்தால் அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை முகாமிலேயே அகதிகளாக இருப்பார்கள். எனவே அதற்கான நடவடிக்கைகளை இருநாட்டு அரசுகளும் இணைந்து தமிழ்நாட்டு தலைவர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டம் தற்போது வந்துள்ளது" என்றார்.