ETV Bharat / state

‘இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா’ - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இன்று இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரிடம் எடுத்துரைப்பதாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

‘இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா’ - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்
‘இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா’ - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்
author img

By

Published : Jul 31, 2023, 3:59 PM IST

‘இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா’ - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்

சென்னை: இந்தியாவிற்கு ஒரு வார காலம் பயணமாக வந்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா தான் என்பதை புரிந்து கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியாவிற்கு ஒரு வார பயணமாக வந்தபோது அவர் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பின்னர் தனது பயணத்தை முடித்து கொண்டு இலங்கை புறப்பட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கையில் உள்ள மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக இந்திய ரூபாய் 750 மில்லியன் பணம் வழங்கியுள்ளது. இதற்காக இந்திய அரசிற்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

மேலும் இலங்கை 13வது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் ஆவணத்தை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளோம் எனவும், தமிழக அரசு இலங்கை மக்களின் வளர்சிக்காக உதவிகள் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். மலையகத் தமிழர்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கான விழா நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு இலங்கை மலையக மக்களின் தொப்புள் கொடி உறவு ஆகவே விழாவிற்கு அழைப்பு விடுக்க அடுத்த மாதம் மீண்டும் இந்தியா வரவுள்ளோம்" எனக் கூறினார்.

இந்திய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்படுவது குறித்து பேசிய போது , “சில மோட்டார் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்த போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இன்று 3 மணிக்கு இலங்கையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடன் ஆலோசனை செய்து பிரதமரிடம் தெரிவிக்க உள்ளோம். மீனவர்கள் பிரச்னை தீர்ப்பதற்காக நிரந்தரத் தீர்வு என்பது ஏற்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறினார்.

“இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகள் வருவதைத் தடுக்க, வடக்கு மாகாண பகுதியில் பொருளாதார நிலையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மற்ற நாடுகளை விட நெருக்கமான உறவு. இலங்கையில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது உண்மையான நண்பன் இந்தியா தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். இந்திய ரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையான யு.பி.ஐ. (UPI) பணப் பரிவர்த்தன முறையை இலங்கையில் பயன்படுத்துவது குறித்த ஒப்பந்தம் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது'' என அவர் கூறினார்.

இதையும் படிங்க: Twitter logo: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்சில் ட்விட்டர் லோகோ மாற்றம்! நீல பறவைக்கு விடுதலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.