விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சற்குணம் கூறியதாவது, "மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சியால் சிறுபான்மை மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிய தொண்டு நிறுவனங்கள் முடக்கப்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வெளிநாட்டு பணம் முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிராக நடக்கும் பாஜக அரசு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கை ஆகும். இந்தியாவைத் தொடர்ந்து நேரு குடும்பம்தான் ஆண்டு வருகிறது என்று கூறிவருபவர்கள், அவர்களின் தியாகத்தைப் பற்றி பேசுவதில்லை" எனக் கூறினார்.