ETV Bharat / state

கொசு உற்பத்தியை தடுக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு - கொசு உற்பத்தியை தடுக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் ட்ரோன் மூலம் மருத்து அடிக்கும் பணிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
author img

By

Published : Jul 7, 2021, 11:12 AM IST

சென்னையில் கரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் தற்போது மழை காலம் தொடங்கவிருப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு அதன் மூலம் எந்தவித நோய்களும் பரவக்கூடாது என்ற நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியிலுள்ள பக்கிங்காம் கால்வாயில் கழிவு நீரில் கொசுக்கள் பரவாமல் இருப்பதற்காகவும், கால்வாயில் ஆங்காங்கே உள்ள செடிகளில் இருக்கும் கொசு முட்டைகளை அழிப்பதற்காகவும் ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றன.

மனிதர்களால் சென்று மருந்து அடிக்க முடியாத இடங்களில் இந்த ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் தொடங்கிவைத்தார்.

கொசு உற்பத்தியை அழிக்கும் மருந்து:

மருந்து தெளிப்பது குறித்து பூச்சியியல் வல்லுநர் சாந்தி, “கால்வாய் பகுதிகளில் மலேரியல் லார்விசைடல் ஆயில் என்ற இந்த மருந்து தெளிப்பதன் மூலம் கொசு முட்டைகள் அழிந்துவிடும்.

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

இந்த மருந்து தெளிக்கும் இடத்தில் நீரோட்டம் இல்லையென்றால் 15 நாள்கள் இந்த மருந்து கொசுவை உருவாக்காமல் தடுக்கும். நீரோட்டம் இருக்கும் இடத்தில் ஒரு வாரத்திற்கு கொசு உருவாக்காமல் அழிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொசுவை ஒழிப்பதற்கு ட்ரோன் இயந்திரம்: மாநகராட்சி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.