ETV Bharat / state

வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது - நம்பிக்கை உரை நிகழ்த்திய முதலமைச்சர்! - Dravida Movement Research Center in 2006

இன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

சென்னை பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்- ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

author img

By

Published : May 16, 2022, 10:38 PM IST

சென்னை: ’தனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர் கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருந்துகொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு ஆளுநருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ’கையில் பட்டத்துடனும் கண்களில் கனவுகளுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் பெயரோடு இனி சேர இருக்கும் பட்டம் என்பது இந்த சமூகத்தில் உங்களை அடையாளம் காட்டும் அறிவு அடையாளம். இந்த பட்டத்தோடு உங்களுடைய பட்டப் படிப்பு முடியப் போவதில்லை. அடுத்தடுத்த உயர்வுக்கு இது ஒரு அடித்தளம், அவ்வளவுதான். எந்த மனிதரின் சிந்தனைக்கும் அவரது மரணத்தில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அது போலத்தான் படிப்பும் இறுதிவரை தொடர வேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு வளர்ச்சிக்குக் காரணமானவர்களை உருவாக்கிய இடம்தான் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகம். அத்தகைய திறமைசாலிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெற வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில், சிந்தனையில், அறிவாற்றலில் மேன்மை பெற்றவர்களாக வளர வேண்டும் என்பது தன்னுடைய ஆசை. தமிழ்நாடு அரசின் மிகமிக முக்கியமான இலக்காக இது அமைந்திருக்கிறது. அதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசிடம் 'வேலைகள் இருக்கின்றனது. ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை' என்று சொல்கின்றனர். அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது.

வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி தனியார் நிறுவனங்களின் மூலமாக பயிற்சிகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஏழை எளிய, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு அந்த வாய்ப்பை அரசுதான் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். அதனை செயல்படுத்துவதற்காகத்தான் ஏராளமான திட்டங்களை அரசு தீட்டி இருக்கிறது.

வேலை கிடைக்கவில்லை என்று யாரும் இருக்கக் கூடாது: வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது. தகுதியான இளைஞர்கள் வேலைக்குக் கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் சொல்லக் கூடாது. அத்தகைய நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க நினைக்கிறது. அதற்காகத் தான் பல திட்டங்களைத் தீட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் திட்டங்களைத் தீட்டிட வேண்டும். பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருவதை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், 2006 ஆம் ஆண்டில் திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்திற்கான விதை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு இப்போது மீண்டும் புத்துயிர் ஊட்டப்பட்டிருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் ஆய்வேட்டினைச் சமர்ப்பிக்கும்போது, ஆய்வாளர்கள் தம் ஆய்வு தொடர்பான பத்துப் பக்கங்கள் அடங்கிய ஆய்வுச்சுருக்கத்தைத் தமிழில் சமர்ப்பிக்க வேண்டும். பல்துறை சார்ந்த ஆய்வுக்கருத்துக்கள் தமிழில் இவ்வாறு மொழியாக்கம் செய்யப்படுவது தமிழ்மொழியின் வளத்திற்கும், அதனுடைய பெருமைக்கும் பெரும் துணையாகும்.

அரிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை மின்மயம் ஆக்குவதற்காகச் சென்னைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ஆம் ஆண்டு முதல் "சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டம்" என்கிற சிறப்புமிகு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், இளநிலை மற்றும் முதுநிலையில் இலவசமான படிப்பு வழங்கப்படும் என்கிற திட்டம். சென்னைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில், 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், இளநிலை பயிலும் மாணவர்களுக்குச் "சமூகநீதி" மற்றும் "திருக்குறள் காட்டும் தொழில்நெறி" ஆகிய பாடங்கள் விருப்பப் பாடங்களாக இடம்பெற இருப்பதைப் பாராட்டி மகிழ்கிறேன்.

ஆகவேதான் காமராசர் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல - கருணாநிதியின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்பதைப் போல எனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர்கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருந்துகொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு ஆளுநருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உயர்கல்வி நிறுவன வரிசையில் சென்னைப் பல்கலைக்கழகம் முதன்மையான இடத்திற்கு வருவதற்கு எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்’ எனப் பேசினார்

இதையும் படிங்க:சென்னை பல்கலைக்கழக 164 வது பட்டமளிப்பு விழா : ஆளுநர், முதலமைச்சர் உரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.