சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பயணிகள் மற்றும் விமான சேவைகளுக்கு ஏற்றார்போல் விமானநிலையத்தை விரிவுப்படுத்தும் பணியை இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கி அதற்கான பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் ரூ.2,400 கோடி திட்ட மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த புதிய முனையங்கள் டிஜிட்டல் மையமாக அமைக்கப்படுகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இப்பணி, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணமாக விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதோடு கட்டுமானப் பொருட்கள் தாமதம், நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம் காரணமாக பணிகள் தாமதமாக நடந்து தற்போது ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தின் முதல் ஃபேஸ் (first phase)பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளது.
இந்த பணிகள் ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என்று இரு பணிகளாக நடத்தி முடிக்கப்படுகிறது. முதல் ஃபேஸ்சில், 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங், புதிய நவீன வருகை, புறப்பாடு முனையம் T2 ஆகியவைகள் உட்பட பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுறிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்டா்கள், விவிஐபிகளுக்கான ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் இந்த முதல் ஃபேஸ்சில் அடங்குகிறன. இந்த முதல் பேஸ்சில் அனைத்து பணிகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த புதிய முனையம் 5 தளங்களை கொண்டுள்ளது. புதிய முனையத்தின் கீழ் தளத்தில் பயணிகளின் உடமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் பயணிகளுக்கான வருகை, இரண்டாம் தளத்தில் புறப்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.மேலும் இயற்கை அழகுடன் கூடிய ஸ்கை லிப்ட் எனப்படும் சூரிய ஒளிக்கதிர்கள் விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் வரும்படியும் பனை மரங்கள் வடிவில் தூண்கள் அமைக்கப்பட்டு, கலையின் நுட்பத்துடன் தயார் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு அதி நவீன சொகுசு இருக்கைகள் சாய்வு இருக்கைகள் என ஏராளமான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் எண்ணிக்கை 3.5 கோடியாக உயரும்!
சென்னை விமானநிலையத்தில் தற்போதைய முனையத்தில் ஆண்டிற்கு 1.7 கோடி பயணிகள் கையாளப்படும் திறன் உடையதாக உள்ளது. ஆனால் புதிதாக அமைக்கப்படும் புதிய ஒருங்கிணைந்த முனையம் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக அமையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு தகுந்தவாறு பயணிகளுக்கான வசதிகளும் அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமானநிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் செக்-இன்-கவுன்டா்கள் 64 மட்டுமே உள்ளன. ஆனால் புதிய ஒருங்கிணைப்பு முனையத்தில் 140 செக்-இன்-கவுன்டா்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுன்டா்கள் முதல் கட்டமாகவும் அடுத்த 40 கவுன்டா்கள் இரண்டாம் கட்டமாகவும் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய முனையம் T 2 செயல்பாட்டிற்கு வந்ததும் தற்போது சா்வதேச முனையத்தில் பயன்பாட்டில் இருக்கும் T3 பழைய முனையம் சுமாா் 42,300 சதுர அடி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கப்படும் என்றும் அதன் பின்பு அந்த இடத்தில் ஃபேஸ் 2 கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதனால் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் தற்போதைய பயணிகளின் எண்ணிக்கையை விட வரும் 2024 ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
புதிய செயலி அறிமுகம்
அதுமட்டுமின்றி நாளை புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த முனையும் பயன்பாட்டிற்கு வந்த பின்பு புதிதாக செல்போன் செயலி ஒன்றை விமான நிலைய ஆணையம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பயணிகள் சிரமம் இன்றி சுலபமாக விமானப் பயணம் மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட உள்ளதாக தெறிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதில், "பயணிகள் விமான நிலையத்திற்குள் எங்கு செல்ல வேண்டும், போர்டிங் நேரம், குடியுரிமை சோதனையில் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டும், எங்கு காத்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இருக்கு.
மேலும், விமான நிலையத்தில் சோதனைகள் முடித்து காத்திருக்கும் நேரத்தில் உணவு மற்றும் டீ காபி அனைத்தும் இருக்கும் இடத்திலிருந்தே இந்த செயலியில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பயணிகளுக்கான வசதிகள் அனைத்தும் அந்த செயலியில் இருக்கும். இதற்கானப் பணிகளை சென்னை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதிதாக விமான நிலையம் வரும் பயணிகள் குழப்பமடையாமல் இருக்க இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள பன்னாட்டு ஒருங்கிணைந்த முனையத்தை நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கிறார். இதற்காக சென்னை விமான நிலையம் திறக்கப்படவுள்ள புதிய முனையத்தில் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது
விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு
புதிதாக திறக்கப்பட உள்ள முனையத்தின் வாயில்கள் D5, D6, D7, D8, D9, D10 என அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் கலைநயம் மிக்க வடிவம் அளிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. மேலும் பிரதமர் தேசிய கொடியேற்றுவதற்கு ஏதுவாக மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பாதுக்காப்பிற்க்கு 40 எஸ்பிஜி(SPG) வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
-
இது சென்னையின் உள்கட்டமைப்பிற்கு கூடுதல் வலு சேர்க்கும். அதோடு இணைப்பு வசதியை அதிகரித்து உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும். https://t.co/lWMBMmvvRU
— Narendra Modi (@narendramodi) April 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இது சென்னையின் உள்கட்டமைப்பிற்கு கூடுதல் வலு சேர்க்கும். அதோடு இணைப்பு வசதியை அதிகரித்து உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும். https://t.co/lWMBMmvvRU
— Narendra Modi (@narendramodi) April 6, 2023இது சென்னையின் உள்கட்டமைப்பிற்கு கூடுதல் வலு சேர்க்கும். அதோடு இணைப்பு வசதியை அதிகரித்து உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும். https://t.co/lWMBMmvvRU
— Narendra Modi (@narendramodi) April 6, 2023
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமானநிலையம், பல்லாவரம், விவேகானந்தர் இல்லம் ஆகியவை ஐந்து அடுக்கு பாதுக்காப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். அதோடு இணைப்பு வசதியை அதிகரித்து உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்" என தமிழில் பதிவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: கீழ்நமண்டி அகழாய்வு பணிகள் துவக்கம் - காணொலி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்!