ETV Bharat / state

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்! என்னென்ன வசதிகள் இருக்கு பாருங்க! - vande bharat loco pilot

சென்னை - நெல்லை இடையிலான தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை வரும் 24ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். வந்தே பாரத் விரைவு ரயில்களை இயக்க எத்தனை லோகோ பைலட்டுகள் அவர்களுக்கு என்னென்ன சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது உள்ளிட்ட முக்கிய அம்சங்களை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு!

vande bharat express
vande bharat express
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 9:33 AM IST

சென்னை: வந்தே பாரத் என்று அழைக்கப்படும் அதிவிரைவு ரயில்களின் என்ஜின்கள் தமிழ்நாட்டில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் அதிவேகத்தில் இயங்கும் தன்மை கொண்டவை என்பதாலும் மற்ற ரயில்களை காட்டிலும் இதில் பயணம் செய்யும் நேரம் குறைவு என்பதாலும் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ரயிலில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னை- மைசூர் ஆகிய வழித் தடங்களில் தற்போது இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகவும், தென் தமிழ்நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை - சென்னை இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை வருகிற 24ஆம் தேதி கானொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்நிலையில், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சோதனை ஓட்டமாக ரயில் இயக்கப்பட்டது.

சோதனை ஓட்டம்: நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் மொத்தம் 8 பெட்டிகள் கொண்டது. நாள்தோறும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும்.

வாரத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினம் மட்டும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டமாக வந்தே பாரத் ரெயில் காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை சென்றடைந்தது.

இந்த ரயிலில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் சென்றனர். காலை 7.30 மணிக்கு விழுப்புரத்திற்கு சென்றடைந்த நிலையில் அங்கு 2 நிமிடம் பயணிகளின் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் சென்றடைந்தது.

வந்தே பாரத்-க்கு 248 லோகோ பைலட்கள்: இந்தியா முழுவதும் உள்ள ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், மேலும் பயணத்தை நேரத்தை குறைக்கவும், "வந்தே பாரத்" ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய வழித்தடத்தில் இந்த 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வந்தே பாரத் ரயில்களை பாதுகாப்பாக இயக்கும் வகையில் சுழற்சி(Shift basis) முறையில் பணியாற்ற லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் ஆவடியில் உள்ள ஐசிஎஃப் மற்றும் ரயில் இயக்கும் பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் எவ்வளவு வேகத்தில் செல்லவேண்டும், 130 கிலோ மீட்டர் வேகத்தில் எப்படி நிலையாக ரயிலை இயக்க வேண்டும் என்பது உள்பட சிறப்பு பயிற்சிகள் லோகோ பைலட்டுகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெற்கு ரயில்வேயில் வந்தே பாரத் ரயிலை சுழற்சி முறையில் இயக்க 248 லோகோ பைலட்கள், உதவி லோகோ பைலட்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தெற்கு ரயில்வெ தெரிவித்து உள்ளது.

பைலட் கேபின் வசதிகள்: ரயிலை எளிதாக இயக்க வசதியாக பெரிய திரை, பணிச் சூழலுக்கு ஏற்ற இருக்கை வசதி, லூப் லைனிலும் வேகம் குறையாமல் ஒட்டும் வகையில் எளிய ஓட்டும் திறன், அதிக இட வசதி, ரயில் பாதுகாவலரிடம் பேசும் வசதி, ரயிலின் முன் மற்றும் பின் பக்கங்களில் கேமரா மூலம் பார்ப்பது உள்ளிட்ட நவீன வசதிகள் இந்த வந்தே பாரத் ரயில்கள் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘நாங்கள் கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்ற மக்கள் ஆதரவு தர வேண்டும்’ - பெண் அர்ச்சகர்கள் வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.