ETV Bharat / state

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் திறப்பு! - சுங்கச்சாவடி

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன் பதிவு மையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.

தீபாவளி சிறப்பு பேருந்துக
author img

By

Published : Oct 24, 2019, 5:24 PM IST

Updated : Oct 26, 2019, 7:39 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையிலிருந்தும் - திருப்பூர், கோவை, பெங்களூரு போன்ற தொழில் நகரங்களிலிருந்தும் பிற நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகளுக்கு கணினி மூலமாக முன்பதிவு செய்வதற்கு 26 சிறப்புக் கணினி முன்பதிவு நிலையங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சென்னையிலிருந்து இந்த ஆண்டு எட்டு லட்சம் பயணிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக ஆறு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
  • கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
  • கே.கே. நகர் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
  • திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் நசரத்பேட்டை அவுட்டர் ரிங்ரோடு வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

அது தவிர நெடுஞ்சாலை ஹைவே பேட்ரோல் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருச்சிவரை உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து ஆர்டிஓக்கள் பணியில் இருப்பார்கள். பேருந்துக்காக சுங்கச்சாவடிகளில் பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 9445014450, 9445014436 என இரண்டு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம்.

மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த ஆண்டில் 36 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததற்காக சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது, தற்போது படிப்படியாக குறைந்துவருகின்றன'' என்றார்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் - ஆட்சியரிடம் மனு!

Intro:Body:சென்னை:

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான கணினி முன் பதிவு மையத்தை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்வதை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னையில் இருந்தும் திருப்பூர் கோவை பெங்களூரு போன்ற தொழில் நகரங்களில் இருந்தும் பிற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு கணினி மூலமாக முன் பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கணினி முன்பதிவு நிலையங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

சென்னையில் இருந்து இந்த ஆண்டு 8 லட்சம் பயணிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக 6 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கிருஷ்ணகிரி, ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். திருச்சி திருநெல்வேலி கோயம்புத்தூர் மதுரை நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்கள் நசரத்பேட்டை அவுட்டர் ரிங்ரோடு வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. அது தவிர நெடுஞ்சாலை ஹைவே பெட்ரோல் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருச்சி வரை உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து ஆர்டிஓக்கள் பணியில் இருப்பார்கள். பேருந்துக்காக சுங்கச்சாவடிகளில் பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு 9445014450 மற்றும் 9445014436 என இரண்டு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும்்் தனியார் பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு
18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் கிடையாது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் அதைவிட சிறப்பான பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கேட்கும்போது தனியார் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலித்தால் அந்த பேருந்து சிறை பிடிக்கப்படும். கடந்த ஆண்டில் 36 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்த அதற்காக சிறை பிடிக்கப் பட்டிருந்தது தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

((பேருந்து வழித்தடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக விரிவான செய்தி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது))
Conclusion:Visuals, bite sent through mojo
Additional visuals here
Last Updated : Oct 26, 2019, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.