சமூக வலைதளங்களில் நம்பகத்தன்மைக்காக காவல் துறையின் பெயரை பயன்படுத்தியும், அரசின் பெயரை பயன்படுத்தியும் மக்கள் மனதில் அச்சத்தை எழுப்பும் வகையிலும் பல்வேறு செய்திகள் பகிரப்படுகின்றன.
எனவே, பொய்யான செய்திகளை பரப்புவது யார் என்பதை கண்டறியும் பொருட்டு சென்னை காவல் துறை தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவானது சமூக வலைதளங்களில் சுற்றி வரும் பொய்யான செய்திகளை கண்டறித்து, அச்செய்தியினை அகற்றும் வகையில் செயல்படும் என காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் மக்களை நம்பவைக்கும் பொருட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு போல் வெளியிடப்படுவதால் பொதுமக்கள் யாரும் அதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முறைகேடு - ஆதார் ஆணைய உதவியை நாடிய சிபிசிஐடி!