ETV Bharat / state

'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம் - மயான ஊழியர் பேட்டி

முகத்தைக்கூட பார்க்க முடியாதபடி மூடிச் சுருட்டப்பட்ட உடல்கள், தங்களுடைய அன்பானவர்களின் கடைசி ஸ்பரிசம் கூட கிடைக்காமல் எட்டி நின்று விம்மும் உறவினர்கள், எங்கோ உயிரிழந்த யாருக்கோ இங்கு இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது என அந்நியப்பட்ட கணங்களை சுமந்து நிற்கிறது, சென்னையின் பழைமை வாய்ந்த சுடுகாடு. கரோனாவால் உயிரிழப்பவர்களை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் மடியில் பொதிந்து கொள்ளும் இந்த சுடுகாட்டின் மறுபக்கம்.

கரோனாவால் உயிரிழப்பவர்களை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் மடியில் பொதிந்து கொள்ளும்  சுடுகாட்டின் மறுபக்கம்.

author img

By

Published : Jun 26, 2020, 4:03 AM IST

’கரோனா’ என்றதும் அதைத் தடுக்க உதவும் மருத்துவ பணியாளர்கள் தொடங்கி காவல்துறை, தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் மயான ஊழியர்கள் குறித்து சிந்தித்து பார்த்திருக்கிறோமா? சடலங்கள் மூலமாகவும் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால், கரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 பேர் உடலை அடக்கம் செய்த கைகளால், இப்போது 20-க்கும் மேற்பட்டோரை புதைக்கும் அவர்களுக்கு மனதளவில் மட்டுமில்லாமல் வேலையிலும் பளு அதிகரித்திருக்கும்தானே...அவர்களிடம் பேச முயற்சித்தோம்.

கரோனாவால் உயிரிழப்பவர்களை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் மடியில் பொதிந்து கொள்ளும் சுடுகாட்டின் மறுபக்கம்.

’இப்ப ஒரு அடக்கம் செய்யும்னுங்க...பிறகு பேசலாம்’ என தொலைபேசியை துண்டித்துவிட்டார் அந்த ஊழியர். சென்னையின் பழைமை வாய்ந்த சுடுகாடு ஒன்றில் பணிபுரியும் அந்நபரின் பதற்றம் நிறைந்த வார்த்தைகள் நம்மையும் சற்று துணுக்குறத்தான் செய்கிறது.

முகத்தைக்கூட பார்க்க முடியாதபடி மூடிச் சுருட்டப்பட்ட உடல்கள், தங்களுடைய அன்பானவர்களின் கடைசி ஸ்பரிசம் கூட கிடைக்காமல் எட்டி நின்று விம்மும் உறவினர்கள், எங்கோ உயிரிழந்த யாருக்கோ இங்கு இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது என அந்நியப்பட்ட கணங்களை சுமந்து நிற்கிறது, அந்த சுடுகாடு.

மீண்டும் அழைப்பு வருகிறது, அதே நபர்தான். ’என் பெயரைக் குறிப்பிட வேண்டாமே’ எனக் கூறிவிட்டு கரோனாவின் கருப்பு பக்கங்களை நமக்கு காட்சிப்படுத்துகிறார்.

”என் சர்வீசில் எத்தனையோ உயிரிழப்புகளைக் கண்டிருக்கிறேன். பல குழிகளைத் தோண்டி என் கைகளாலேயே அவ்வுடல்களைப் புதைத்திருக்கிறேன். பெரிதாக என்னுள் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஆனால் இன்று அப்படியல்ல... தொடர்ச்சியாக கரோனாவுக்கு பலியாகியவர்களின் சடலங்களும், அதைக் கொண்டு வரும் வாகனங்களில் எங்களுக்கான பாதுகாப்பு உடைகளும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் வயதானவர்களே கரோனாவுக்கு எளிதில் பலியாகின்றனர். சில நேரங்களில் ஏன் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன? என தூங்கமுடியாமல் புரளுவேன். இப்போதெல்லாம் காலையில் எழுந்தவுடன் ‘கடவுளே இன்று கரோனாவால் யாரும் உயிரிழக்கக்கூடாது’ என பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டேன்” என மனிதம் தழும்ப பேசுகிறார், சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்.

கரோனா பரவிய ஆரம்ப கட்டத்தில் மருத்துவர்களை புதைக்கக்கூட சிலர் தயங்கினரே...பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதே? உங்களுக்கு அந்த பயம் இல்லையா எனக் கேட்டதற்கு, “என் வேலை இதுதான் என்பதை புரிந்துகொண்டு செய்துவருகிறேன். இதில் ஆட்சேபனை செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களும் மனிதர்கள்தானே” என்றார்.

இதைப் போலவே மதம், இனம் என எவ்வித பேதமும் இன்றி கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைத்துவரும் உறவுகள் அமைப்பைச் சேர்ந்த காலித்திடம் பேசினோம்.

அவர் கூறுகையில், “ கரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆதரவற்ற நிலையில் மரணிப்பவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் யாரேனும் மரணமடைந்தால் அவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவருகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை அடக்கம் செய்திருக்கிறோம்.

குறிப்பாக சென்னையில் மரணமடையும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சொந்த ஊர் அனுப்பிவைக்க ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடுசெய்துகொடுக்கிறோம். உயிரிழந்தவரை மீட்கமுடியாது, அவர்களின் குடும்பத்திலிருப்பவர்களையாவது காக்க வேண்டுமே என்பதால் இந்த சேவையை செய்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: ஸ்பெயின் மருத்துவனையில் கட்டித் தழுவிய முதிய தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.