ETV Bharat / state

குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் - cm

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சங்கல்ப் (SANKALP) சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி
குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி
author img

By

Published : Oct 9, 2021, 8:18 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரியில் சங்கல்ப் பள்ளி சுமார் 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 200 குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்திடும் வகையில் இப்புதிய சங்கல்ப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பள்ளியில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிசியோதரபி சிகிச்சை, பேச்சுப்பயிற்சி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அக்குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி மூலம் நகை தயாரிப்பு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், டேடா என்டரி, சோப்பு தயாரிப்பு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, முகக்கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர், சங்கல்ப் பள்ளியை சிறப்பான முறையில் நடத்தி வருவதற்காக அப்பள்ளி நிர்வாகிகளை பாராட்டி, வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சங்கல் நிறுவன அறங்காவலர் டாக்டர் முல்லாசரி அஜித் சங்கர்தாஸ், இயக்குநர்கள் திருமதி சுபாஷினி ராவ், திருமதி லட்சுமி கிருஷ்ணகுமார், திருமதி சுலதா அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.